Let's Capture Better
“LET’S CAPTURE BETTER”, a session on Photography, falling under the avenues of Professional Development and Club Service was carried out by Rtr.Thilojan, on the 19th of July 2020 at the Green Hills Retreat Center. the session was conducted by Rtr.Thilojan a profession and the best photographers of Rotaract Club of Peace City Hatton to the other members, covering up an immense section on cameras and mobile photography.
He made it a point in teaching facts about photography to enhance our photography skills and many other facts that we weren’t aware of even though we came up on it daily in the process of taking photographs through our mobiles.
It was a great session by our fellow Rotaractor especially even greater when he talked us through about his passion and furthermore shared his knowledge about photography.
"LET'S CAPTURE BETTER" செயற்றிட்டமானது புகைப்பட துறை தொடர்பாக பீஸ் சிட்டி ஹட்டன் றோட்டறக் கழக உறுப்பினர்களுக்காக Club service, Professional development போன்ற வருடாந்த திட்டமிடலை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட செயலமர்வாகும். இது எமது கழகத்தின் துணைதலைவரும், கழகத்தின் உத்தியோகபூர்வ புகைப்பட வடிவமைப்பாளருமான Rtr. திலோஜன் அவர்களால் 2020 ஜூலை 19ம் திகதி கிறீன் ஹில்ஸ், கொட்டகலையில் நடைபெற்றது. தனக்கே உரிய பாணியில் மிக நேர்த்தியாக Rtr. திலோஜன் அவர்களால் இச்செயலமர்வு நாடாத்தப்பட்டது.
இச்செயலமர்வின் ஊடாக புகைப்பட நுணுக்கங்களும், தொலைபேசியினூடான புகைப்பட நுணுக்கங்களும் கற்பிக்கப்பட்டன. மேலும் அடிப்படை புகைப்பட விளக்கங்களும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. கேமரா இல்லாத போதிலும் தொலைபேசியின் மூலம் சிறந்த நிழல்படங்களை எடுக்கும் முறை பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. இதன் ஊடாக ஒரு தேவையின் போது சுயமாக, தரமான புகைப்படங்களை புகைப்படவியளாளர் ஒருவரின் உதவியின்றி எடுக்கும் ஆற்றலை செயலமர்வில் பங்குகொண்ட அனைவரும் பெற்றுக்கொண்டனர். மேலும் தனது புகைப்படத் துறை அனுபவங்களையும், சமகாலத்தில் புகைப்பட துறைக்கான வரவேற்பையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.
Edited by
Rtr.Harini
Rtr.Thishani
No comments:
Post a Comment